ரா.தங்கமணி
உலு சிலாங்கூர்-
கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அரசின் 'புளுபிரிண்ட்' (Blueprint) உதவித் திட்டத்தின் கீழ் இந்தியக் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உலு சிலாங்கூர் கோலகுபுபாரு இந்திய கிராமத் தலைவர் (KKI) பாலசந்திரன் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வரும் புளுபிரிண்ட் உதவித் திட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அவ்வகையில் சிறு, நடுத்தர வணிகங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இங்கு சிறு வணிகங்களை மேற்கொண்டு வரும் இந்தியர்களை அடையாளம் கண்டு அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட இலாகாவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட இவர்களுக்கு உதவிப் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அணமையில் நான்கு இந்தியர்களுக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டன என்று பாலசந்திரன் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment