Thursday, 3 June 2021

செட்டி பாடாங்-க்கு பதில் டத்தாரான் செட்டி' என பரிந்துரை

ஷா ஆலம்-

நாட்டில் தற்போது சர்ச்சையாக  உருவெடுத்துள்ள செட்டி பாடாங் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில் செட்டி பாடாங் என்பதை டாத்தாரான் செட்டி என  மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்திய வணிக சமூகத்தின் அடையாளமாக திகழும் செட்டி சமுகத்தின் பங்களிப்பை உணர்த்தும் செட்டி பாடாங்கை அழிப்பதற்கு கிள்ளான்  நகராண்மைக் கழகம் முயற்சிக்கிறதா?

2008ஆம் ஆண்டுக்கு முன்பே இத்தகைய முயற்சிக்கு தேசிய முன்னணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2015 இல் மீண்டும் இந்த விவகாரம் எழுந்தபோது கோத்தா அலாம் ஷா  சட்டமன்ற உறுப்பினராக இருந்த நானும் கிள்ளான் நகரக் கழக உறுப்பினராக இருந்த யுகராஜாவும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால் அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள கிள்ளான் நகராண்மை கழகத்தின் உள் நோக்கம் தான் என்ன? 

இவ்விவகாரம் தலைதூக்க விடாமல் இருப்பதற்கு ஏதுவாக செட்டி பாடாங்-ஐ இனி  டத்தாரான் செட்டி  என மாற்றுவதோடு அதனை ஆவணப்படுத்தும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சிக் குழுக் கூட்டத்தில் பரிந்துரைத்தேன். அதற்கு ஆட்சிக்குழு  உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment