கோலாலம்பூர்-
நாட்டில் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தினால் முடங்கி போன பூ விற்பனை தொழில்துறை மீண்டும் செயல்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் பூ விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று கூறிய டத்தோஶ்ரீ சரவணன், கேமரன் மலை பூ உற்பத்தியாளார்கள் உட்பட இதர பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் விவசாயம், மூலப்பொருள் தொழில்துறை அமைச்சின் அலுவலகத்தின் அனுமதி கடிதத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் சொனார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட முழு முடக்கத்தின் காரணமாக பூ விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பூ உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஆலய வழிபாட்டிற்கும் வீட்டில் சமய நிகழ்வுகளுக்கும் பூக்கள் அவசியமானது எனும் நிலையில் பூ விற்பனைக்கு அனுமதி தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் டத்தோஶ்ரீ சரவணன் முயற்சியில் பூ வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment