ஷா ஆலம்-
கிள்ளான் பாடாங் செட்டி வரலாற்று தடத்தை பாதுகாப்பதில் அரசியல் பேதங்களை கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைய வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ரா.ஆனந்தன் வலியுறுத்தினார்.
இந்திய சமூக வணிகமான செட்டி சமூகத்தின் 100 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள செட்டி பாடாங் பெயர் மாற்றப்படுவது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில் செட்டி பாடாங்-ஐ 'டத்தாரான் செட்டி' என பெயர் மாற்றத்தை முன்மொழிந்துள்ள சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் பரிந்துரையை மலேசிய இந்தியர் குரல் வரவேற்கிறது.
அதே வேளையில் ஒட்டுமொத்த இந்திய சமுதாயமும் செட்டி பாடாங் வரலாறு நிலைபெற்றிட அரசியல் பேதங்களை கடந்து இந்தியர் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும் என்று ஆனந்தன் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment