கோலாலம்பூர் -
எம்40 பிரிவைச் சேர்ந்த வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள புதிய திட்டங்கள் என்ன என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு முடக்கத்தை அடுத்து பிரதமர் உதவி நிதி திட்டங்களில் எம்40 பிரிவினர் விடப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
5000 வெள்ளிக்கும் அதிகமான குடும்ப வருமானம் கொண்ட எம்40 பிரிவினருக்கு பிபிஆர் நிதி, ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், மின்சார கழிவு, ஆஸ்ட்ரோ கட்டண கழிவு என எவ்வித உதவி திட்டங்களையும் நடப்பு அரசாங்கமான பெரிக்காத்தான் நேஷனல் வழங்கவில்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் குற்றஞ்சாட்டினார்.
No comments:
Post a Comment