கோலாலம்பூர் -
மலேசியாவில் தவில் நாதஸ்வர கலைத்துறையில் ஒரு தவில் வாசிப்பாளராக வலம் வருபவர் ஜனனேஸ்வரி. ஏழு ஆண்டுகளுக்கு மேல் பெண் தவில் வாசிப்பாளராக திருமண நிகழ்ச்சிகள், கோவில் நிகழ்வுகள்,இசை நிகழ்ச்சிகள் என பல இடங்களில் தவில் வாசித்து வருகிறார். தற்போது ஒரு புதிய முயற்சியாக பாடல் துறைக்கும் தன் ஆர்வத்தை திருப்பியுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு தாய்மார்களுக்கு சமர்ப்பணமாக அம்மா பாடல் ஒன்றை வெளியிடவுள்ளார்.
'உணர்ந்தேன் நான்’ தலைப்பில் இந்தப் பாடல் இன்று 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு அவரின் Youtube சேனல் J Music Productions அகப்பக்கத்தில் வெளியீடு காணவுள்ளது. இந்தப் பாடலை இவரே எழுதி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை மென்மையான குரலுக்குச் சொந்த்க்காரர் புவனேஸ்வரி பாடியுள்ளார்.
அதோடு, நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான கபில் ராஜ் இசையமைத்துள்ளார். இவர்களின் பாடல் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
யூ டியூப் லிங்க்:
No comments:
Post a Comment