பத்து பஹாட்-
பத்து பஹாட், பாரிட் ராஜாவில் நடந்த பேரணி, 'தோல்வி அரசாங்கம்' என்ற பதாகையை எரித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலான வேளையில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி-ஐ முறையாக பின்பற்றாதது தொடர்பில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.
இவ்விசாரணைக்கு உதவும் பொருட்டு 21 வயது மதிக்கத்தக்க இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
No comments:
Post a Comment