ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
நேற்றிரவு 3 மணிநேரம் விடாது
பெய்த அடைமழையில் இங்குள்ள பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக
கம்போங் முஹிபா பாசா 2, சுங்கை ரேலா தோட்டம், எல்பில் தோட்டம் போன்ற இடங்களில் பல வீடுகளில்
வெள்ள நீர் புகுந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் பெரும் துயரத்துக்கு ஆளாகினர்.
இந்த வெள்ளப் பிரச்சினைக்கு மக்களின்
குறை தீர்க்கும் பொழுதாக இன்றைய பொழுது விடியாமல் அரசியல் தாக்குதலாக நாளாக அமைந்திருக்கிறது.
நேற்றைய கடுமையான மழையின்போது
இங்குள்ள மஇகா. பிஎஸ்எம், பிகேஆர், ஜசெக ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி
விடிய விடிய மக்களுக்கு சேவையாற்றினர்.
ஆனால் இந்த வெள்ளப்பிரச்சினை
தொடர்பில் மஇகாவினர் வெளியிட்ட ஆடியோ, காணொளிகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
சுங்கை
சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் களமிறங்கி சேவை
செய்ய முன்வராத போதிலும் மஇகா தங்களது சேவையை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் கடந்த
13 ஆண்டுகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பிஎஸ்எம், பிகேஆர் பிரதிநிதிகள்
பதவி வகித்த போதிலும் இன்னமும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண முற்படாதது ஏன்? என்று
தொகுதி மஇகா செயலாளர் கி.மணிமாறன், பேராக்
தோழமை அமைப்பின் தலைவர் ரா.முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இவர்களின்
கேள்விக்கு நேரடி பதில் கொடுக்க முடியாமல் வெள்ளப் பிரச்சினையில் கூட மஇகா அரசியல்
செய்கிறது என்று எதிர்தரப்பினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக கேசவன் பதவி வகிக்கின்ற போதிலும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையே இங்கு நீடிக்கிறது.
இந்நிலையில்
வெள்ளப் பிரச்சினையில் மஇகா அரசியல் செய்கிறது என்று இன்று சாடும் தரப்பினர் இதே வெள்ளம்,
வீடு, நிலப் பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்ததை மறந்து விடலாமா?
மஇகாவை
சாடியே இங்கு அரசியல் செய்த கட்சிகள் இன்று மஇகாவை தாக்கி பேசுவது நியாயம்தானா?
டான்ஶ்ரீ
விக்னேஸ்வரனிடமிருந்து உதவி கிடைக்குமா? என்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் சேவையே செய்யாமல் வெறும் பதவியை மட்டுமே அலங்கரித்துக்
கொண்டிருக்கும் கேசவனை மஇகாவினர் சாடுவதில் தவறேதும் கிடையாது.
No comments:
Post a Comment