கோலாலம்பூர்-
கோவிட்-19 பெருந்தொற்றால் மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மஇகாவின் சார்பிலும் மலேசிய தமிழர்களின் சார்பிலும் கணிசமான தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
மலேசியத் தமிழர்கள் தங்களின் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழர்களுக்கும் தமிழக அரசுக்கும் கைகொடுக்க வேண்டியதும் மனிதாபிமான அடிப்படையில் இயன்ற உதவிகளை வழங்குவதும் நமது கடமை என்றும் தமிழ்நாடு கோவிட்-19 நிவாரணங்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் பொது அமைப்புகளோ தனிநபர்களோ மஇகா தலைமையகம் அல்லது தங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்று ஓர் அறிக்கையில் அவ்விருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment