Sunday 25 April 2021

பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகளை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது? கணபதிராவ் கேள்வி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) அதிகமான சீனர்களை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக திகழ்ந்தாலும் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் விரும்புகின்ற கட்சியக ஜசெக (DAP) திகழ்கிறது நிதர்சனமான உண்மை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

ஜசெகவை ஓர் இனவாத கட்சியாகவே சித்திரித்து பெர்சத்து, பாஸ், அம்னோ ஆகிய கட்சிகள்  தங்களது அரசியல் ஆட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இம்மூன்று கட்சிகளும் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலையில் ஜசெகவைஓர் இனவாத கட்சியாக சித்திரித்து வருகின்றனர்.

ஆனால், ஜசெக வெறும் சீனர்களை மட்டும் கொண்ட கட்சியல்ல. இந்திய்ரகளும் மலாய்க்காரர்களும் விரும்பும் கட்சியாக ஜசெக வளர்ச்சி கண்டு வருகிறது.  ஜசெகவை பிரதிநிதித்து இந்தியர்கள் அதிகமானோன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக ஒரு சீனரையும் ஓர் இந்தியரையும் நியமித்தது ஜசெக,நெகிரி செம்பிலானில் இரு ஆட்சிக்கழு உறுப்பினர்களை நியமித்தது ஜசெக, பேராவில் சட்டமன்ற சபாநாயகராக இந்தியரை முதன் முதலில் நியமனம் செய்தது ஜசெக, ஜோகூரில் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினரை  நியமனம் செய்தது ஜசெக. சிலாங்கூரில் கடந்த இரு தவணைகளாக ஆட்சிக்குழு உறுப்பினராக தம்மை நியமித்தது ஜசெக… இப்படி ஜசெக இன வேறுபாடுகளை கடந்து ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், ஜசெகவை இனவாத கட்சி என்று முத்திரை குத்தும் கட்சிகள்தான் இனவாத வேறுபாட்டில் இந்தியர்களையும் சீனர்களையும் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து வருகின்றன. பெர்சத்து, அம்னோ, பாஸ் கட்சிகள் செய்யும் இனவாத நடவடிக்கையை விடவா ஜசெக இனவாதம் செய்கிறது?

குறிப்பாக ஓரங்கட்டிய அரசியல் செய்யும் இந்த கட்சிகளின் இனவாதப் போக்கினால் இந்தியர்கள் பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் பின் தங்கியே கிடக்கின்றனர்.



மலாய்க்காரர், சீனர்கள், இந்தியர்கள், பூர்வக்குடியினர், கடஸான், ஈபான் என்று எவ்வித வேறுபாடும் இன்றி அனைத்து இன மக்களையும் சரிசமமான குடிமக்களாய் நடத்த தவறிய ஆளும் அதிகாரத்தில் இருந்த கட்சிகள்தான் இன்று ஜசெகவை ஓர் இனவாத கட்சி என்று முத்திரை குத்துகின்றன.

உண்மையில் ஜசெக அனைவருக்கும் பொதுவான கட்சிதான். சீனர்கள் அதிகமாக இருந்தாலும் இந்தியர்கள், மலாய்க்காரர்களின் நலனை காக்க இக்கட்சி ஒருபோதும் தவறியதில்லை.

தற்போது மலாய்க்காரர்களும் ஜசெகவில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்கின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மாற்றமே பிற்காலத்தில் இன வேறுபாடுகளற்ற மலேசிய சமூகத்தை கட்டி எழுப்பும் என்று தாம் நம்புவதாக கோத்தா ராஜா ஜசெக தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்வில் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், சிலாங்கூரமாநில ஜசெக தலைவர் கோபிந்த் சிங், அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு, ஜசெகவின் மூத்தத் தலைவர் தான் கொக் வய் ஷா ஆலம் நகராண்மை கழக உறுப்பினர் பாப்பராய்டு, யுகராஜா, கிராமத் தலைவர்களும் ஊராட்சி  மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment