Sunday, 11 April 2021

துரோகிகள் சூழ்ந்துள்ள கூட்டணியில் எவ்வாறு இணைய முடியும்?- டத்தோஶ்ரீ அன்வார்

 காஜாங்-

துரோகிகளின் கூட்டம் நிறைந்திருப்பதாலேயே பதவிகள் வழங்கப்பட்டும் தேசிய கூட்டணியில் பக்காத்தான் ஹராப்பான் இணையவில்லை என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சொந்த கட்சிக்குள்ளேயே இருந்த தரோகிகளின் நடவடிக்கையாலேயே புதிய அரசாங்கம் அமைந்தது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முன்னெடுக்கப்பட்ட ‘ஷெராட்டான் நடவடிக்கை’யால்  பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி 22 மாதத்தில் கவிழந்தது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இருந்து பெர்சத்து விலகிய பின்னர் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டத்தோஶ்ரீ அஸ்மின் அலி, அவரது அணியினர் அம்னோ , பாஸ் கட்சியுடன் இணைந்து பெரிக்காத்தான் நேஷனல் எனும் தேசிய கூட்டணி அரசாங்கத்தை அமைத்தனர்.

சொந்த கட்சியைச் சேர்ந்த துரோகிகளாலேயே நாங்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் துரோகிகள் அங்கம் வகிக்கும் அரசில் வெறும் பதவிக்காக எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்? என்று டத்தோஶ்ரீ அன்வார் கேள்வி எழுப்பினார்.



No comments:

Post a Comment