கோ.பத்மஜோதி
கோலாலம்பூர்-
பெரிக்காத்தான்
நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினாலும் தேசிய முன்னணியை ஒருபோதும் மஇகா கைவிடாது
என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நடப்பு அரசாங்கத்தில்
இடம்பெற்றுள்ள அம்னோ, வரும் பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சியை ஆதரிக்காது என்று கூறப்பட்டுள்ள
நிலையில் மஇகா நடப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
நடப்பு அரசாங்கத்தில்
மஇகா துணைத் தலைவர் அமைச்சராக பதவி வகிக்கிறார். அத்தகைய சூழலில் நடப்பு அரசாங்கத்திற்கு
எவ்வாறு ஆதரவு அளிக்காமல் இருக்க முடியும்?
பதவி மட்டும்
வேண்டும். ஆனால் ஆதரவு அளிக்கக்கூடாதா? என்று நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவை உறுப்பினர்
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment