ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா ஜசெகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தற்போது பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் துரோனோ சட்டமன்ற உறுப்பினருமான பவுல் யோங்கும் பெர்சத்து கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளார்.
கடந்தாண்டு பேரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது ஜசெகவிலிருந்து விலகி சுயேட்சை வேட்பாளராக இவ்விருவரும் அறிவித்துக் கொண்டனர்.
இதனிடையே கடந்த மாதம் கெராக்கான் கட்சியின் இணையவிருப்பதாக சிவசுப்பிரமணியம் அறிவித்தார். ஆனால் தற்போது இவ்விருவரும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளதாக பேரா பெர்சத்து கட்சியின் செயலாளர் ஸைனால் ஃபவ்ஸி பஹாருடின் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிவசுப்பிரமணியம் ஈப்போ பாராட் பெர்சத்து உறுப்பினராகவும் பவுல் யோங் பத்துகாஜா பெர்சத்து உறுப்பினராகவும் இருந்து வருவார்கள் என்று அவர் சொன்னார்.
மேலும், சிவசுப்பிரமணியமும் பவுல் யோங்கும் கூட்டு உறுப்பினர்கள் எனும் அடிப்படையில் பெர்சத்து கட்சியில் வாக்களிக்கும் உரிமை இல்லை என அக்கட்சியின் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
ஜசெகவில் இருந்தபோது பலரின் வாக்குகளை பெற்று பேரா ஜசெகவில் சக்தி வாய்ந்தவராக திகழ்ந்த சிவசுப்பிரமணியம் இன்று பெர்சத்து கட்சியில் இணைந்து வாக்களிக்கும் உரிமையை கூட இழந்திருப்பது காலக்கொடுமைதான்...!
No comments:
Post a Comment