ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
அம்னோ தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஜமிடி பதவி விலக மஇகா நெருக்குதல் அளிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அம்னோவின் உட்கட்சி விவகாரங்களில் மஇகா என்றுமே தலையிட்டது கிடையாது. அம்னோவின் தலைவர் யார் என்பதை அக்கட்சியின் பேராளர்களும் உறுப்பினர்களுமே முடிவே செய்ய வேண்டுமே தவிர மஇகா அல்ல.
அம்னோவின் தலைவராக
யார் வந்தாலும் மஇகா அவரை ஏற்றுக் கொள்ளும். அம்னோவுக்கும் மஇகாவுக்கும் 60 ஆண்டுகால
நட்புறவு நீடித்து வருகிறது. அம்னோவுக்கு புதிய தலைவர் வேண்டுமா? வேண்டாமா? அக்கட்சியே
முடிவு செய்யட்டும் என்று அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment