ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா மாநில
மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளராக பேரா மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பக்காத்தான்
ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பேரா மாநிலத்தில்
ஆட்சி அமைத்தபோது இந்தியர்களுக்கான நியமனப் பதவி குறித்த எதிர்பார்ப்பு நிலவியது.
பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டணியில் தேசிய முன்னணி அங்கம் வகிப்பதால் அதில் இடம்பெற்றுள்ள மஇகாவுக்கு
ஏதேனும் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆயினும் அனறைய
மாநில மந்திரி பெசார் டத்தோ அஹ்மாட் பைசால் அஸுமு மஇகாவை ஓரங்கட்டி வந்த நிலையில் இந்தியர்களுக்கு நானே பிரதிநிதி,
அவர்களின் பிரச்சினையை நேரடியாக நானே கவனிப்பேன் என்று அறிக்கை விடுத்தார்.
இதனிடையே, டத்தோ
பைசால் அஸுமு மந்திரி பெசார் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட பின்னர் பேரா மாநில அம்னோ
தலைவர் டத்தோ சரானி முகமட் புதிய மந்திரி பெசாராக பதவியேற்றப் பின்னர் ம இகாவுக்கு
நியமனப் பதவி வழங்கப்படும் என்று கணிக்கப்பட்டது.
அதன்படி, டத்தோ
இளங்கோவை சிறப்பு செயலாளராக நியமனம் செய்துள்ளார் டத்தோ சரானி.
இந்த நியமனப்
பதவி பேரா மஇகாவுக்கு புது தெம்பை அளிப்பதாகவும் இந்திய சமுதாயத்திற்கு
சேவையாற்ற மஇகாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment