கோலாலம்பூர்-
நாட்டின் 9ஆவது பிரதராக முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் பதவியேற்க வேண்டும் என்பதே பெரும்பாலான மலேசியர்களின் தேர்வாக உள்ளது ஓர் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.
வட மலேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட மலேசிய அரசியலை உட்படுத்திய ஆய்வில் 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் யார் பிரதமராக பதவியேற்க வேண்டும்? என்ற் ஆய்வில் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கே பெரும்பாலானோரின் ஆதரவு கிட்டியுள்ளது.
சமூக ஊடகத்தின் வழி கடந்தாண்டு டிசம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீண்டும் பிரதமராக பதவியேற்பதற்கு 51.5 விழுக்காட்டினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அவருக்கு அடுத்த நிலையில் அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசானுக்கு 14.8 விழுக்காட்டினரும் நடப்பு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கு 10.2 விழுக்காட்டினரும் பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு 9.6 விழுக்காட்டினரும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹடி அவாங்கிற்கு 9.1 விழுக்காட்டினரும் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
அதோடு வெளியுறவு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனுக்கு 2.4 விழுக்காடும் தற்காப்பு அமைச்சர்டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரிக்கு 0.5 விடுக்காடும்,அம்னோ தலைவர் ஸாயிட் ஹமிடிக்கு 0.3 விழுக்காடும், பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலிக்கு 0.2 விழுக்காடும் ஆதரவு கிட்டியுள்ளனர்.
\அண்மைய காலமாக சமூக ஊடகங்களில் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு விவகாரங்களில் கருத்துகளை பதிவிட்டு வரும் டத்தோஶ்ரீ நஜிப், பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment