ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
இந்தியர்கள்
சொந்த வீடுகளை கொண்டிருக்கும் வகையில் வீடமைப்பு, ஊராட்சி மன்ற அமைச்சு வகுத்துள்ள
வீட்டுடமை திட்டங்களில் பங்கு பெறுவதற்கு தொழிலாளர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழகம் பரிந்துரை
செய்யும் என்று அக்கழகத்தின் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இந்நாட்டிலுள்ள
இந்தியர்கள் சொந்த வீடுகளை பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை இக்கூட்டுறவுக் கழகம்
முன்னெடுத்துள்ளது. குறிப்பாக, சுங்கை சிப்புட்டில் உள்ள தாமான் துன் சம்பந்தன், சிரம்பானில்
தாமான் திவி ஜெயா, காஜாங்கில் தாமான் புக்கிட் முத்தியாரா, பகாங், ரவூப்பிலும் , பாடாங்
செராயிலும், தெலுக் இந்தான், பத்து 6 பகுதியிலும் பல வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக
மேற்கொள்ளப்பட்டுள்ளன, மேலும் ஜொகூர், ஸ்கூடாயிலும், சுங்கை சிப்புட்டில் கிந்தா செளஜானா
வீடமைப்புத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மலிவு விலை
வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் அது சொந்த வீடுகளை கொண்டிராத இந்தியர்களுக்கு
பெரும் பயனாக அமைந்திருக்கும் என்று இன்று கேபிஜே கூட்டுறவுக் கழகத்தி விஸ்மா துன் ச.சாமிவேலும் கட்டடத்தை அதிகாரப்பூர்வமாக
திறந்து வைக்கு நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சருமான
டத்தோஶ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment