மது அருந்தியதாக நம்பப்படும் 21 வயது இளைஞர் செலுத்திய வாகனத்தால் மோதி தள்ளப்பட்ட 44 வயது மதிக்கத்தக்க உணவு விநியோகிப்பாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் நிகழ்ந்ததாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, கண்காணிப்புப் பிரிவின் தலைவர் ஏசிபி சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.
குத்தகைத் தொழிலாளியான 44 வயது முகமட் ஸைலி முகமட் மனைவிக்கு உணவை கொடுத்து விட்டு புக்கிட் அந்தாராபங்சாவிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் நிஸ்ஸான் கிராண்ட் லிவினா ரகக் காரினால் மோதப்பட்டு சாலையில் தூக்கியெறியப்பட்டார். கடுமையான காயங்களுக்கு இலக்கான அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்துக்கு காரணமான வாகனமோட்டி மது அருந்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறிய அவர், இவ்விபத்து 1987 சாலை போக்குவரத்து சட்டம் செக்ஷன் 44 (1) கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சொன்னார்.
No comments:
Post a Comment