ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்திற்காக வழங்கப்பட்ட மானியம் முறையாக வழங்கப்பட்டதா? என்ற கேள்வியை விட இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் மானியம் முறையாக வந்து சேர்கிறதா? என்பதே இப்போதைய கேள்வியாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியிறுத்தினார்.
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக 11ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் வெ.500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2016 முதல் 2020 வரை ஒவ்வோர் ஆண்டுக்கும் வெ.100 மில்லியன் வழங்கப்படுகின்ற நிலையில் இந்த நிதி முறையாக இந்திய சமுதாயத்தை வந்து சேர்ந்ததா? என்பதே எனது கேள்வியாகும்.
இந்திய சமுதாயத்தின் பொருளாதார திட்டமிடலுக்காக உருவாக்கப்பட்ட செடிக், அதன் பின்னர் மித்ரா ஆகிய அமைப்புகளுக்கு அரசாங்கம் அறிவித்தபடி ஒவ்வோர் ஆண்டும் வெ.100 மில்லியன் வந்தடைந்ததா? எனும் ஆய்வு செய்தால் 50 முதல் 60 விழுக்காடு மட்டுமே ஒதுக்கப்படுகிறது எனும். அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கிறது.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பட வேண்டிய முழு ஒதுக்கீடும் இந்தியர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடம் வந்து சேராத்தை இந்திய சமுதாயம் உணர வேண்டும் என்பதை தமது எண்ணமாகும்.
தனிபட்ட முறையில் பிறரை சாடுவதோ குறை கூறுவதோ தன்னுடைய நோக்கமல்ல என விவரித்த கணபதிராவ், செடிக், மித்ரா ஆற்ற தவறிய கடமைகள் குறித்து விரைவில் கேள்வி எழுப்புவேன்.
ஆனால், அதற்கு முன்னதாக அரசாங்க அளவில் அறிவிப்புகளில் ஒதுக்கப்படும் மானியம் உண்மையிலேயே இந்திய சமுதாயத்திற்காக அரசாங்கம் செலவிடுகிறதா? என்ற உண்மையை ஒவ்வொரு இந்தியரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment