ரா.தங்கமணி
தைப்பிங்-
மேலவை சபாநாயகர் பதவியிலிருந்து நிறைவு பெற்றாலும் மஇகாவையும் இந்திய சமுதாயத்தையும் வலுபடுத்தி மேம்படுத்தும் மாபெரும் பொறுப்பு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வசம் உள்ளது என்று மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் மு.வீரன் குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சியாக திகழ்கின்ற மஇகாவை இன்னும் வலுபடுத்துவதற்கு ஆக்ககரமான செயல் திட்டங்கள் தேவை.
Youtube Link: https://youtu.be/7dL0lXcl9pQ
மூன்று அரசாங்கம், மூன்று பிரதமர்கள் என பல தலைமைத்துத்தின் கீழ் திறம்பட செயலாற்றியுள்ளார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தில் மஇகா வலுபெறும் நிலையில் அதனை இன்னும் வலுபடுத்துவதற்கான செயல் திட்டங்களை அவர் முன்னெடுப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்று தைப்பிங் நகராண்மைக் கழக உறுப்பினருமான வீரன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment