பிரதமர் பதவியை அடைவதற்கு வேறு வழியை தேடிக் கொள்கிறேன். இனி டத்தோஸ்ரீ அன்வாருடன் ஒத்துழைக்க மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.
என்னுடன் அன்வார் ஒத்துழைக்காதபோது நானும் இனி அவருடன் ஒத்துழைக்க போவதில்லை.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இனி தாம் இல்லை என்ற போதிலும் அமானா, டிஏபி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவேன்.
Youtube Link: https://youtu.be/2Y54C7AXqD0
அன்வார் பரிந்துரைத்த மூத்த அமைச்சர் பதவியை நிராகரித்த துன் மகாதீர், பிரதமர் பதவியை அடைவதற்கு வேறு வழியை தேடி கொள்கிறேன் என்று துன் மகாதீர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிஎச் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீரை ஏற்க முடியாது என அண்மையில் பிகேஆர் கட்சி திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பதவி போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment