பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் கறுப்பினத்தவர் ஒருவர் மீது மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர் மரணித்ததை கண்டித்து மேற்கொண்டு வரும் போராட்டங்களால் அமெரிக்கா பற்றி எரிகிறது.
ஜோர்ஜ் ஃப்ளாய்ட் எனும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஆடவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரின் கழுத்தில் காலை வைத்து நசுக்கியதில் மூச்சுத் திணறி இறந்துள்ளார்.
போலீசாரின் இந்த அராஜகச் செயல் சமூக வலைத்தளங்களில் கசிந்ததை அடுத்து கொதித்தெழுந்த அமெரிக்கர்கள் போலீசாரின் செயலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆறாவது நாளாக நடந்தேறிய இந்த போராட்டத்தின் உச்சக்கட்டமாக போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதோடு பல்வேறு கடைகளும் சூறையாடப்பட்டன.
நியூயார்க், சிக்காகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், ஃபிலடெல் ஃபியா போன்ற நகரங்களில் போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்கும் நடவடிக்கையாக போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பெப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.
இந்த போராட்டத்தின் விளைவாக 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் அந்த உத்தரவை மக்கள் மீறி செயல்படுவது பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.
No comments:
Post a Comment