Friday, 12 June 2020

கோவிட்-19: கட்டுப்படுத்துவது கடினம்- உலக சுகாதார நிறுவனம்

நியூயார்க்-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமாகும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரைசஸ் கவலை தெரிவித்தார்.

இந்நோய்க்கான மருத்துவப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல், நோய் தொற்று கண்டவர்க்ளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணுதல் போன்ற நடவடிக்கைகள் இந்நோயை கட்டுப்படுத்துவதற்கான முதன்மை அணுகுமுறையாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதோடு, கோவிட்-19க்கான தடுப்பு மருந்தை கண்டுப்பிடிப்பதற்கு உலக தலைவர்கள் ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment