ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் நாடு முழுவமும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில் வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பி40 குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் 'உதவி' எனும் செயலியை மஇகா அறிமுகம் செய்தது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த செயலியின் வழி வறுமைக் கோட்டில் வாழும் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் சுங்கை சிப்புட் தொகுதி மஇகாவின் சார்பாக கோவிட்-19 பேரிடர் கால உதவியாக 1,500 குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டதாக சுங்கை சிப்புட் மஇகா செயலாளர்கி.மணிமாறன் தெரிவித்தார்.
இவ்வட்டாரத்தில் உள்ள பி40 பிரிவுக்குட்பட்ட குடும்பத்தினருக்கு உதவிடும் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மஇகா தலைமைத்துவம் முன்னெடுக்கும் இத்தகைய நடவடிக்கை வறிய குடும்பத்தினருக்கு பேருதவியாக அமைந்திருக்கிறது என்று மணிமாறன் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment