Thursday 28 May 2020

மகாதீர், முக்ரீஸ் உட்பட 5 பேர் பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கம்

கோலாலம்பூர்-
பெர்சத்து கட்சியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அவரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் உட்பட 5 பேரை அக்கட்சி வெளியேற்றியுள்ளது.

கடந்த 18ஆம் தேதி நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கட்சியின் தலைவரும் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினை ஆதரிக்காமல் எதிர்க்கட்சி அணி வரிசையில் அமர்ந்ததை காரணம் காட்டி துன் மகாதீர், டத்தோஸ்ரீ முக்ரீஸ், முன்னாள் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சாடிக், கல்வி அமைச்சர் மஸ்லீ மாலேக்,  அமிருடின் ஹம்ஷா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

மகாதீர் அக்கட்சியின் அவைத் தலைவர் என்பதோடு முக்ரீஸ் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் சைட் சாடிக் இளைஞர் பிரிவுத் தலைவராகவும் பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment