Tuesday 10 March 2020

ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை குறி வைக்கிறாரா சிவசுப்பிரமணியம்?

ரா.தங்கமணி


ஈப்போ-
பேரா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அதிர்ச்சிகரமான அரசியல் சூழல் அங்கு நிலவுகிறது.

32 சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவோடு தேசிய கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் ஜசெகவைச் சேர்ந்த துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல்  யோங், புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் ஆகியோர் தங்களை சுயேட்சை பிரதிநிதிகளாக அறிவித்துள்ளனர்.

ஜசெகவின் சின்னத்தில் 2008 முதல் மூன்று தவணைகளாக புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தன்னை ஜசெகவின் தீவிர ஆதரவாளன் என காட்டிக் கொண்டு வந்த சிவசுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு பேரா இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அரசாங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை கைப்பற்றும் நோக்கில் சிவசுப்பிரமணியத்தின் இந்த நடவடிக்கைகள் அமைந்திருக்கலாம் என்று நம்பதகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் மஇகாவின் பிரதிநிதிகள் யாரும் பேரா அரசாங்கத்தில் யாரும் இல்லாத நிலையில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை சிவசுப்பிரமணியம் கைப்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியையும் மஇகாவையும் விமர்சித்து தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசுப்பிரமணியம், இனி அதே தேசிய முன்னணி, மஇகா தலைவர்களுடன் கைகோர்த்து செயல்படுவாரா? மக்களுக்கான சிறந்த சேவையாளனாக தன்னை காட்டிக் கொள்வாரா?

No comments:

Post a Comment