சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீது சுமத்தப்பட்ட இரு குற்ற்ச்சாட்டுகளை இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை
உயிர்ப்பிக்க முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் சொஸ்மா சட்டத்தில் பி.குணசேகரன்,
மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் விடுதலைப் புலிகள்
சார்ந்த பொருட்களை வீட்டிலும், அலுவலகங்களிலும் வைத்திருந்ததாக குணசேகரன் மீது 2 குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டது.
குணசேகரன் மீதான குற்றச்சாட்டை
ரத்து செய்யுமாறு அரசு தரப்பு வழக்குரைஞர் அஸ்லிண்டா நீதிபதி மடிஹா ஹருல்லாவை கேட்டுக்
கொண்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது
குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
No comments:
Post a Comment