யார் வேண்டுமானாலும் பிரதமர்
பதவிக்கு ஆசைப்படலாம். ஆனால் அதனை சரியான வழியில் அடைய வேண்டும் என்று பிகேஆர் கட்சியின்
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரதமர் பதவியை அடைய விரும்புபவர்களை
நான் தடுப்பதில்லை. ஆனால் அதற்கென்று வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற
வேண்டும்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின்
புரிந்துணர்வுபடி இதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதனை மீறி யாரும் செயல்பட வேண்டாம்
என்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் இப்ராஹிம் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment