கண் வலி பிரச்சனை காரணமாக மருத்துவ விடுமுறை எடுத்துக் கொண்டதை யாரும் பூதாகரமான விஷயமாக உருவாக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வலியுறுத்தினார்.
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு தாம் வருகை தந்ததை பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் கேள்விக்குறியாக உள்ளனர்.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கண்வலி பிரச்சினை காரணமாக மருத்துவ விடுமுறை எடுத்து எடுத்துக்கொண்டேன். ஆயினும் நவம்பர் 1ஆம் தேதியே தஞ்சோங் பியாய் தொகுதிக்கு வருகை தந்தேன்.
மருத்துவ விடுமுறை எடுத்துக் கொண்டு பிரச்சாரத்திற்கு தாம் இங்கு வருகை தந்தது குறித்து பக்காத்தான் ஹராப்பான் ஆதரவாளர்கள் போலீஸ் புகார் செய்துள்ளது கேலிக்குரிய ஒன்றாகும் என்று பேஸ்புக் அகப்பக்கத்தில் டத்தோஸ்ரீ நஜிப் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதனிடையே நமக்கு கண் வலி பிரச்சனை மட்டும் உள்ளது மாறாக கண்பார்வை மங்கி விடவில்லை.
தனது கண்வலி பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதை விட வேறு விஷயங்களை வைத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள் நஜிப் மேலும் தெரிவித்துள்ளார்.
Advertisement
No comments:
Post a Comment