பத்து நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியிலிருந்து தாம் விலகப் போவதில்லை என்று பி.பிரபாகரன் தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் உதவித்
தலைவர் தியான் சுவா இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக தாம் பதவி விலக வேண்டும்
என்று பலர் கோரிக்கை விடுத்தாலும் தாம் இப்பதவியிலிருந்து விலக் போவதில்லை.
பதவி விலகுமாறு பலர் கோரிக்கை
விடுத்தாலும் மக்களுக்கான எனது சேவை தொடரும் என்று அவர் மேலும் சொன்னார்.
கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது
தியான் சுவா போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில்
தியான் சுவா தேர்தலில் போட்டியிட தடையில்லை என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து பத்து தொகுதியில்
தியான் சுவா மீண்டும் போட்டியிடுவதற்கு ஏதுவாக பிரபாகரன் தமது ராஜினாமா செய்ய வேண்டும்
என்று 14 அரசு சார்பற்ற இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன.
No comments:
Post a Comment