தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்பு கொண்டிருந்ததன் அடிப்படையில் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 கைது செய்யபட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் கோலாலம்பூரிலுள்ள இலங்கை தூதரக கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிருந்தார் என்று புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை பிரிவின் தலைமை இயக்குனர் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
எல்டிடிஇ- உடன் தொடர்பு கொண்டிருந்ததன் அடிப்படையில் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட 7 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான காப்புறுதி முகவர் , இலங்கை தூதரக கட்டடத்தின் மீது தாக்குதல் தொடுக்க திட்டம் வகுத்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இத்திட்டம் வகுக்கப்படுவதற்கு துணையாக இருந்த பிற எல்டிடிஇ ஆதரவாளர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்க முனையும் எந்தவொரு தரப்பினரிடமும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அவர் சொன்னார்.
இந்த கைது நடவடிக்கையில் ரவாங்கைச் சேர்ந்த மறுசுழற்சி பொருள் விற்பனையாளர், காப்புறுதி முகவர், பேராக் சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த டாக்சி ஓட்டுனர், கூலிம், கெடாவைச் சேர்ந்த தொழில்நுட்ப உதவியாளர், சுங்கை பூலோவைச் சேர்ந்த உணவுக் கடை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவர்.
No comments:
Post a Comment