தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் தரப்பினர் சொஸ்மா சட்டத்தின் கீழ்
கைது செய்யப்பட்டத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி மனநிறைவு கொள்ளாவிட்டால்
பரவாயில்லை என்று பிரதமர் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நாட்டின்
பாதுகாப்பு காரணங்களுக்காகவே போலீஸ் சொஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
சொந்த விருப்பப்பத்திற்கு
யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசாருடன் தொடர்பு கொண்டு
விளக்கங்களை பெற்றேன்.
ராமசாமிக்கு
இதில் மனநிறைவு இல்லையென்றால் பரவாயில்லை. உரிய காரணங்கள் இருப்பதாலேயே இது நடந்துள்ளது
என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment