Thursday 10 October 2019

பக்காத்தான் கூட்டணியின் ஆட்சிக்கு அடித்தளமிட்டது ஹிண்ட்ராஃப் போராட்டமே- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைப்பதற்கு 'ஹிண்ட்ராஃப்' போராட்டத்தில் இந்திர்கள்ஏற்படுத்திய அரசியல் சுனாமியே காரணமாகும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் சலுகைகள் நசுக்கப்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத இந்தியர்கள் கடந்த 2007 நவம்பர் 26ஆம் தேதி தலைநகரில் வீதிகளில் திரண்டு ஆளும்கட்சிக்கு எதிராக எழுப்பிய குரல் மலேசியர்கள் மட்டுமின்றி உலக கவனத்தையும் மலேசியா மீது திரும்பி பார்க்க வைத்தது.

ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு முன்னர் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கலாம். ஆனால் ஹிண்ட்ராஃப் ஏற்படுத்திய தாக்கம் ஆளூம் கட்சியையே திணறச் செய்தது.
ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலில் அன்றைய தேசிய முன்னணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

அதன் எதிரொலி 13ஆவது பொதுத் தேர்தலில் எதிரொலித்து 14ஆவது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்துள்ளது.

இந்தியர்கள் மட்டும் வீதியில் இறங்கி போராடாமல் இருந்திருந்தால் தேசிய முன்னணியை வீழ்த்தி பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியாது என்பதை இன்றைய ஆளும் தலைவர்கள் உணர வேண்டும்.

இந்தியர்களின் போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற ஆட்சியை வைத்து இந்தியர்களுக்கு எதிராக இனவாத கருத்துகள் பிரயோகப்படுத்துவது நிறுத்தப்பட  வேண்டும் என்று அவர் மேலும்  வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment