Tuesday, 8 October 2019

பிக் பாஸ் டைட்டிலை வென்றார் முகேன் ராவ்

சென்னை-
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் டைட்டிலை முகேன் ராவ் வென்றுள்ளார்.
கடந்த 100 நாட்களாக தனியார் விஜய் தொலைகாட்சியில் ஒளியேறிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த முகேன் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளிலும் திறம்பட விளையாடி ரசிகர்களின் அன்பை மட்டுமல்லாது விளையாட்டுகளிலும் வென்றார்.

நேற்று நிகழ்ச்சியின் இறுதி நாளில் முகேன் ராவை வெற்றியாளராக நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் அறிவித்தார்.

'பிக் பாஸ்' வின்னர் முகேன் ராவுக்கு கேடயமும் 50 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment