நாட்டின் மூத்த பத்திரிகையாளர் அக்னி சுகுமார் இன்று காலமானார்.
ஊடகத்துறையில் நன்கு அறிமுகமான
அக்னி சுகுமார் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் குரல் போன்ற நாளிதழ்களில்
பணியாற்றியுள்ளார். இறுதியாக ‘வணக்கம் மலேசியா’ இணையதள ஊடகத்தின் ஆசிரியராக பணியாற்றி
வந்தார்.
சில காலம் நோய்வாய்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகலில் அவர் காலமானார். அவருக்கு
பத்மினி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.
அன்னாரின் இறுதிச் சடங்கு
No. 45, Jalan BP 3, Taman Bukit Permata 68100 Batu Caves எனும் முகவரியிலுள்ள அவரின்
இல்லத்தில் நடைபெறும்.
அக்னி சுகுமாரின் திடீர்
மரணம் எழுத்தாளர்களையும் ஊடகத் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரை பிரிந்து துயருரும்
அவர்தம் குடும்பத்தினருக்கு ‘பாரதம்’ இணைய ஊடகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
No comments:
Post a Comment