மக்கள் விரும்பினால் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும்
அமல்படுத்துவதை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
இது சிறந்தது என்பதை மக்கள்
உணர்ந்தால் அது பரிசீலிக்கப்படும்.
ஜிஎஸ்டி வேண்டும் என்று மக்கள்
விரும்பினால், விற்பனை, சேவை வரியை (எஸ்எஸ்டி) விட இது சிறந்ததாக இருக்கும் என கருதப்பட்டால்
அது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.
ஆனால் அந்த பரிசீலனையும்
மாற்றமும் அக்டோபர் 11ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் 2020க்கான வரவு செலவு
திட்டத்தில் இடம்பெறாது என்றார் அவர்.
14ஆவது பொதுத் தேர்தலுக்குப்
பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்து
எஸ்எஸ்டி வரியை அறிமுகம் செய்தது.
No comments:
Post a Comment