Saturday, 12 October 2019

துரோகிகளுக்கு இடமில்லை- டான்ஸ்ரீ கேவியஸ் அதிரடி

கோ.பத்மஜோதி

பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சியை அழிக்க நினைக்கும் துரோகிகளுக்கு இனி அக்கட்சியில் இடமில்லை என்னு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிலரின் சுயநலப் போக்கினால் இக்கட்சி பிளவுப்பட்டு கிடந்தது.

ஆனால் தற்போது ஆர்ஓஎஸ் தலையீட்டின் பேரில் தலைமைத்துவப் போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளதோடு தன்னை அக்கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ளது.

துரோகிகளின் சுயநலப் போக்கால் கட்சி அழிவுப்பாதையில் செல்வதை அங்கீகரிக்க முடியாது. இனி இக்கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

ஆளும் கட்சிக்கு ஆதரவு

தேமுவிலிருந்து வெளியேறி சுயேட்சை கட்சியாக அறிவித்துக் கொண்ட மைபிபிபி ஆளும் பக்காத்தான் ஹராப்பான் ஆதரிக்கிறது.

சுயேட்சை கட்சி எனும் அடிப்படையில் ஆளும் கட்சிக்கு இந்த ஆதரவு வழங்கப்படுகிறது என்றார் டான்ஸ்ரீ கேவியஸ்.



No comments:

Post a Comment