Friday, 11 October 2019

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு; ஆட்சிக்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் கைது

கோலாலம்பூர்-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவ்விருவருரையும் புக்கிட் அமான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜசெகவைச் சேர்ந்த இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதை புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவின் தலைமை இயக்குனர் அயூப் கான் மைடின் உறுதிப்படுத்தினார்.

பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 அல்லது சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இவ்விருவரையும் 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

No comments:

Post a Comment