கேஎல் மராத்தோன் ஓட்டப் பந்தயத்தின்போது இரு ஆடவர்களை மோதி தள்ளிய வாகனமோட்டியை போலீசார் கைது செய்தனர்.
25 வயது மதிக்கத்தக்க அப்பெண்மணியை
29ஆம் தேதி இரவு 11.10 மணியளவில் கெப்போங், தாமான் எமாஸில் கைது செய்ததாக சிலாங்கூர்
மாநில சாலை போக்குவரத்து, குற்ற விசாரணை தலைமை இயக்குனர் அஸ்மான் ஷாரிட் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அந்த பெண்
போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையின்போது
5 எரிமின்போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகரில்
நடைபெற்ற ஓட்டப் போட்டியின்போது கூட்டத்தில் நுழைந்த ஹோண்டா சிட்டி ரகக் கார் இரு ஆடவர்களை
மோதி தள்ளியது.
No comments:
Post a Comment