Tuesday, 1 October 2019

கோத்தா கெமுனிங் ஆலயம் சமூக சேவை மையமாக உருமாற்றம் காண்கிறது-ஆலயத் தலைவர் பெருமிதம்

ஷா ஆலம்-
கோத்தா கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் சேவை மையமாக உருமாற்றம் கண்டு வருவதாக அதன் தலைவர் நாதன் சுப்பையா தெரிவித்தார்.
வழிபாட்டு தலங்கள் சமூகச் சேவை மையமாக மாற வேண்டும் என்னும் நோக்கில் இவ்வாலயம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சமுதாய பணிகளில் செம்மையாக ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

ஆலயத்தில் நடைப்பெற்ற வசதி குறைந்த குடும்பத்தினருக்கான அன்பளிப்புகள்,மளிகை பொருட்கள், சேலைகள் வழங்கும் நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பேசி அவர்,மாதந்தோறும் ஆலயம் சார்பாக சில குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்,கல்வி உதவிகள்,சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்று  பல உதவிகளும் நிகழ்ச்சிகளும் ஆலயம் தொடர்ந்து செய்து வருகின்றது என்றும் அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து  ஆலய துணை செயலாளரும் சமூகச் சேவை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளருமாகிய  முருகன் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் இன்றைய நிகழ்ச்சி தீபாவளியை முன்னிட்டு ஆலய மாதர் பிரிவினரின் ஆதரவுடன் பி40 தகுதி உடையை தனித்து வாழும் தாய்மார்கள்,குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் என்று 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

வெ.300க்கும் மேற்பட்ட உதவி பொருட்கள் இம்முறை வழங்கப்பட்டதுடன்,சமூக பாதுகாப்பு இலாகா என்றழைக்கப்படும் சொக்சோ அதிகாரிகள் விமலா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சொக்சோ உதவிகள்,பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை விளக்கி கூறினர் என்றும் அவர் விவரித்தார்.
ஆலயத்திற்கு வரும் நல்லுங்களின் ஆதரவுடனும் ,ஆலய நிர்வாகத்தினரிம் ஒத்துழைப்புடனும் இத்தகைய நிகழ்ச்சிகளை தொடர்ந்து எங்களால் படைக்கமுடிவதாகவும் சமுதாய பணியே இறைவன் பணி என்னும் கொள்கையுடன் ஆலய நிர்வாகம் செயல்ப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் விவரித்தார்.

No comments:

Post a Comment