Tuesday, 1 October 2019

.'நெகாராகூ' இசைக்கும்போது எழுந்து நிற்கவில்லையா?கைது செய்யப்படலாம்- போலீஸ்

கோலாலம்பூர்-
நாட்டின் தேசிய கீதம் (நெகாரா கூ) இசைக்கப்படும்போது மரியாதை செலுத்தும் வகையில் எழுந்து நிற்கவில்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
1968 தேசிய கீதம் சட்டத்தின் கீழ் இச்செயல் ஒரு குற்றமாக கருதப்படும் என்று கூறிய புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின்  துணை தலைமை இயக்குனர் மியோர் ஃபரிடாலாட்ராஷ், தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லையென்றால் அங்கு பணியில் இருக்கும் போலீசார் அவரை கைது செய்ய முடியும் என்று கூறினார்.

சரவாக்கில் ஒரு நிகழ்வின்போது தேசிய கீதம் இசைகப்படும்போது சிலர் அமர்ந்திருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இதன் தொடர்பில் எவ்வித புகாரையும் இன்னும் பெறவில்லை என்ற அவர், 
குற்றஞ்சாட்டப்படும் நபருக்கு100 வெள்ளிக்கு மேற்போகாத அபராதமும் ஒரு மாதத்திற்கு மேற்போகாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment