செப்டம்பர் 30ஆம் தேதி தொடக்கம் ராகாவில் ‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டி இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டு ரிம 1,000 ரொக்கப் பரிசு தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருகிறது.
இப்போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்றால் ரசிகர்கள் ராகாவுடன் காலை முதல் இரவு வரை இணைந்திருந்து அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று சொன்னவுடனே 03-95430993 எண்களுக்கு அழைக்க வேண்டும். பிறகு, ‘‘கேளுங்கோ சொல்லுங்கோ’ போட்டியின் அழைப்பாளருக்கு அறிவிப்பாளர்கள் 10 பாடலின் துணுக்குகள் ஒலியேற்றுவார்கள். பிறகு, ஒலியேற்றப்பட்ட 10 பாடலின் பெயர்களை ஒரு நிமிடத்தில் கண்டு பிடிக்க வேண்டும்.
10 பாடல்களின் பெயர்களைச் சரியாக கண்டு பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு ரிம 1000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அப்படி கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டால் சரியாக கண்டு பிடித்த பாடல்களுக்கு மட்டும் ரொக்கப் பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு சரியான பாடலுக்கு ரிம 10 வழங்குவார்கள்.
மேல் விவரங்களுக்கு, raaga.my அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
No comments:
Post a Comment