இனம், சமயம் சார்ந்த உணர்ச்சிப்பூர்வமான
விவகாரங்களை எழுப்புவோர் இனி எந்தவித அறிவிப்பும் இன்றி கைது செய்யப்படுவர் என்று அரச
மலேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.
இன விவகாரங்களை தூண்டும்
தரப்பினர் மீது எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டப்படாது. அத்தகைய செயல்களை செய்வோர்
மீது விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக கைது செய்யப்படுவர்.
இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள்
மக்களிடையே அச்சத்தை உருவாக்கி நாட்டின் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கலாம் என்று
அவர் சொன்னார்.
இன விவகாரங்கள் தொடர்பில்
இனி எச்சரிக்கை விடுக்கப்படாது. உடனடியாக கைது
நடவடிக்கைதான் மேற்கொள்ளப்படும் அரசியல்வாதிகளுக்கும்
இது பொருந்தும் என்று அவர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment