பிகேஆர் கட்சியின் தேசியத்
தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ள இடம் காலியில்லை
என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் மாற்றமோ புதிய
நியமனமோ இப்போது இல்லை என்று கூறிய அவர், அமைச்சரவையிலிருந்து யாரும் பதவி விலகாததால்
இப்போது இடம் காலியில்லை என்று அவர் மேலும் சொன்னார்.
பதவி ஒப்படைப்பு தொடர்பில் தொடர்ந்து அதிகரித்து அழுத்தங்களை
அடுத்து டத்தோஶ்ரீ அன்வார் அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்று எழுப்பப்பட்ட
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment