Friday 16 August 2019

கார் விபத்தில் ஆனந்தபவன் உரிமையாளர் மனைவி பலி

தைப்பிங்-
மலேசியாவில் புகழ்பெற்ற ஆனந்தபவன் உணவகத்திண் உரிமையாளர் ஹரிகிருஷ்ணனும் அவர்தம் குடும்பத்தினரும் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இன்று அதிகாலை 3.25 மணியளவில் தைப்பிங்கிலிருந்து பினாங்கு நோக்கி செல்லும் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 200.9ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வேகக்கட்டுப்பாட்டை  இழந்த வாகனம் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஹரிகிருஷ்ணனின் துணைவியார் திருமதி  புவனேஸ்வரி கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஹரிகிருஷ்ணன், அவரது இரு புதல்வர்களும் காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெறுவதற்காக தைப்பிங் மருத்துவமனைக்குக் கொன்டுச் செல்லப்பட்டனர்.

மரணமடைந்த திருமதி புவனேஸ்வரின் உடல் சவப்பரிசோதனைக்காக பாரிட் புந்தார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.

No comments:

Post a Comment