ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் அதன் ஆயுட்காலம் கொஞ்ச காலமே என்று அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அதை நிறைவேற்றுவதில் தவறியதால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளது.
இதன் காரணமாக அக்கூட்டணியை ஆதரித்தவர்கள் மீண்டும் தேமுவின் ஆதரவாளராக மாறி வருகின்றனர்.
15ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் நாம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படலாம். ஆதலால் இந்திய சமுதாயத்தின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு மஇகா உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
15ஆவது பொதுத் தேர்தல் நமக்கான தேர்தல். ஆதலால் இப்போதே களமிறங்கி பணியாற்றுங்கள் என்று மஇகாவின் 73ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்து உரையாற்றியபோது டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment