Thursday, 15 August 2019

சட்டம், வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார் அர்விந்த் ராஜ்

ஷா ஆலம்-
எம்.எஸ்.யூ பல்கலைக்கழகத்தில் சட்டம்,வர்த்தகத் துறையில் பயின்ற அர்விந்த் ராஜ் /பெ ராதா@தேவன் இளங்கலை பட்டம் பெற்றார்.
அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் இப்பட்டத்தை பெற்றார்.

நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்கு மத்தியில் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளது தமது சேர்த்த பெருமையாக கருதுகிறேன் என்று அர்விந்த் ராஜ் தெரிவித்தார்.

இவரின் தந்தை ராதா@ தேவன் வாடகைக் கார் ஓட்டுனர் ஆவார்.

இளங்கலை பட்டப்படிப்பிற்கு பின்னர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நிதி மோசடி தொடர்பில் பயிற்சியை இவர் மேற்கொண்டார்.

இளங்கலை பட்டம் பெற்ற அர்விந்த் ராஜுக்கு பெற்றோர் ராதா@தேவன்- திருமதி ஆர்.கமலா. உடன்பிறந்தோர் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment