கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயா காளியம்மன் ஆலயத்தில் இரு கும்பல்களுக்கிடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் சந்தேகத்திகுரிய 28 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் |
சம்பந்தப்பட்ட ஆலயத்தில்
இடம்பெறவுள்ள ரத ஊர்வலத்திற்கு கூடாரம் அமைப்பது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு மூண்டது எனவும்
இறுதியில் பாராங் கத்தி வீச்சில் முடிந்தது எனவும் சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு
துறை தலைவர் பட்ஸில் அஹ்மாட் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட பாராங் கத்திகள் |
இந்த கைகலப்பில் ஈடுபட்டதன்
சந்தேகத்தின் பேரில் தற்போது 28 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்க கோலசிலாங்கூர்
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய
ஏனைய சந்தேக பேர்வழிகளுக்கு போலீஸ் வலை வீசி வருகிறது என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment