சிறார் மதமாற்ற விவகாரத்தில் ஒருதலைபட்சமான சட்ட மசோதாவை தாம் ஏற்க முடியாது. என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அதை பற்றி தாம் கவலை கொள்ளவில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
மதமாற்ற விவகாரத்தில் ஒருதலைபட்சமான நடவடிக்கையை ஏற்க முடியாது. இவ்விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாடு வெளிப்படையானது.
இனம், சமயம் சார்ந்த விவகாரங்களில் விட்டுக் கொடுக்கும் போக்கை தன்னால் அனுசரிக்க முடியாது. இதில் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அதை பற்றி கவலையில்லை.
ஒருதலைபட்சமான மதமாற்ற சட்ட மசோதா மீண்டும் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும் அதனை தாம் ஆதரிக்கப்போவதில்லை என்று அவர் சொன்னார்.
18 வயதுக்கும் குறைவான சிறார்களை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ய தாய் அல்லது தந்நை ஒருவரின் சம்மதம் இருந்தாலே போதும் எனும் சட்ட மசோதாவை சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் சாரி சட்டமன்ற அவையில் தாக்கல் செய்தார்.
இதற்கு முன் சிறார் மதமாற்றத்திற்கு பெற்றோர் (தாய்,தந்தை) சம்மதம் வேண்டும் என கூறப்படும் சட்டத்தை மாற்ற இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது
இதற்கு இஸ்லாம் அல்லாத ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆட்சேபம் எழுந்த நிலையில் அண்மையில் சிலாங்கூர் சுல்தானை சந்தித்தனர்.
அதோடு அடுத்த சட்டமன்றக் கூட்டத்தில் இந்த சட்ட மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி பெசார் நேற்று கூறியிருந்தார்.
No comments:
Post a Comment