கோலாலம்பூரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நோயாளியும், ஓட்டுனரும் மரணமடைந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 6.42 மண் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் 368.4ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
சிலிம் ரீவர் மருத்துவமனையிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
ஐந்து பேர் பயணித்த இவ்வண்டியில் மருத்துவர், தாதியர், உதவி ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர்.
No comments:
Post a Comment